செவ்வாய், 20 செப்டம்பர், 2011

புதிதாக லேப்டாப் வாங்கவிருப்பவர்களுக்கு தேவையான டிப்ஸ்


Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.
அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்.

ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.

இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.

லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.....

SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER

சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்...

Laptop Configuration

Processor

Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.

எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ

Intel Core i7
Intel Core i5
Intel Core i3

என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.

Intel® Core™ i7-640M Processor 2.80 GHz

அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.

RAM

அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).

HARD DISK

அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.

நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.

ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.

எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம்.

பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM SPEED போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.

DVD DRIVE

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

GRAPHIC CARD

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.

சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ?

நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.

இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.

இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.

இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.

ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.

அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.

Operating System ( OS)

விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள்.  ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.

இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.

Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version

இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு.

இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.  http://tamilcomputertips.blogspot.com/

Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.

அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.

இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு!


குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு! 



தற்போது உள்ள சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. சமீபத்தில் குமரி மாவட்டத்தில் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் என்ற செய்தி ஊடகத்தில் பரவலாக காண நேரிட்டது. உள்ளே சென்று பார்த்தால் அதிர்ச்சி காத்திருக்கின்றது. முஸ்லிம் பெயர் தாங்கிய ஒரு மாணவி, மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு! இது ஏதோ தனிப்பட்ட செய்தியல்ல! ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை பரவலாக காணமுடிகிறது. நம்மவர்கள், குறிப்பாக இளம் வயதினர்கள் இதுபோன்ற குற்றங்களில் அதிகம் ஈடுபடுவதற்கு முதல் குற்றவாளியாக அவர்களுடைய பெற்றோர்களை நிறுத்தலாம். சிறுவயது முதல் தாய்பாசத்தோடு சேர்த்து நற்போதனைகளையும் ஊட்டிவளர்க்கப்படாத குழந்தைகள் தான் பிற்காலங்களில் அவர்கள் பெரியவர்களான பிறகு இதுபோன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். அவர்களுடைய வீடு, கல்வி, தொழில் சூழல்களில் மருந்துக்குக்கூட மார்க்கத்தை நாம் காணமுடியாது! கண்ணியமாக மார்க்க அடிப்படையில் வளர்க்கப்பட்ட குழந்தைகளால் தான் ஒரு சமுதாயத்தைச் சிறப்புறச் செய்யமுடியும்.
பெற்றோர்கள் தம்முடைய குழந்தைகளை மேல்நிலைப்பள்ளி / கல்லூரிகளில் சேர்த்துவிட்டு நம்முடைய வேலை முடிந்துவிட்டது என்றில்லாமல் அவர்களுடைய அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும். அப்படி கவனிக்கத்தவறிய
குழந்தைகள் தான் கூடாநட்பு, காதல் போன்ற மார்க்கத்திற்கு முரணான செயல்களில் ஈடுபட்டு சமுதாயச் சீரழிவை உண்டாக்குகின்றனர். கூடாநட்பு, காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிப்பதற்கு இஸ்லாம் எந்த அளவிற்கு இவற்றைத் தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு பெற்றோர்களிடத்தில் இல்லாததே காரணமாகும்.
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதிஉள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும்! நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும்! மனம் ஏங்குகின்றது; இச்சைக் கொள்கின்றது; பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது அல்லது பொய்யாக்குகின்றது’ (புகாரி)
‘சிந்தனையும், தவறான பார்வையையும், அசிங்கமான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்துவரும் அசிங்கங்களுக்கு இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை!
மேற்கூறிய நபி (ஸல்) அவர்களின் அறிவுரையை பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு சிறுவயது முதல் கூறி கூடாநட்பு என்ற சீர்கேட்டில் தம் பிள்ளைகள் விழுந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால் எப்படி காதலிப்பது என்ற கேடுகெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றபோது, அதைத் தடுக்க வேண்டிய பெற்றோர்களும் சேர்ந்துக்கொண்டு தான் அதைப் பார்க்கின்றனர். விளைவு, குழந்தைகள் பரீட்சையில் தேர்வு ஆகாமல் இருப்பது ஒருபுறமிருக்க, தம் பிள்ளைகள் யாருடனேனும் ஓடிப்போகும் போது அவமானம் தாங்காமல் தற்கொலைச் செய்து கொள்கின்ற அளவிற்கு சென்றுவிடுகின்றனர்.
மேலும் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாக இருக்கிறது. இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்:
“முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்”  (அல்-குர்ஆன் 66:6)
நம் குழந்தைகளுக்கு இஸ்லாமிய அடிப்படை விஷயங்களான பெற்றோர்களைப் பேணுதல், நேர்மை, உறவினர்களுடன் நடந்துக்கொள்ளும் முறை, அமானிதங்களைக் கடைப்பிடிப்பது, தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதுடன் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறையில் குடித்தல், உண்ணுதல், பேசுதல், போன்றவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த அடிப்படையில் வளர்க்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்களான பிறகு அவர்களின் செயல்பாடுகள், அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக அமைவதோடல்லாமல் இறைவன் தன் திருமறையில் கூறியிருப்பது போல நம்மையும் நம்முடைய குழந்தைகளையும் நரகநெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொண்டவர்களாக மாறிவிடலாம்.
கல்வி கற்பதன் அவசியத்தை இஸ்லாம் வலியுறுத்திய அளவிற்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தவில்லை! இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான்:
‘அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.’  (அல்-குர்ஆன் 39:9)
ஆனால் நாம் நம் குழந்தைகளுக்கு உலகக்கல்வியை கற்றுக் கொடுப்பதற்கு எடுக்கக்கூடிய முயற்சியில் 100 -ல் ஒரு பங்கு கூட இஸ்லாமியக் கல்வியை கற்றுக்கொடுப்பதற்கு முயற்சிப்பதில்லை என்றால் அது மிகையாகாது! நபி (ஸல்) அவர்கள் போதித்த அடிப்படை இஸ்லாமியக் கல்வியோடு சேர்ந்த உலகக் கல்வி தான் இரு உலகிலும் பலன் அளிக்கக்கூடியதாக உள்ளது.
நம்மில் எத்தனை பேர் நம்முடைய குழந்தைகளை குர்ஆனை பொருள் உணர்ந்து ஓதக் கூடியவர்களாக உருவாக்கி இருக்கிறோம்? இறைவன் திருமறையில், ‘இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்’ என்று ஒரே சூராவில் திரும்ப திரும்ப நான்கு முறை கூறுகின்றான். (பார்க்கவும் : 54:17; 54:22; 54:32 மற்றும் 54:40)
ஓதுவதற்கு எளிதான குர்ஆனின் மேல் குழந்தைகளுக்கு ஆர்வம் காட்டுவதற்கு பதிலாக கற்றுக் கொள்வதற்கு கடினமான உலகக்கல்வியில் அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். உலகக் கல்வி வேண்டாம் என்று கூறவில்லை! மார்க்க கல்வியை விட்டுவிட்டு உலகக் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டாம் என்றுதான் கூறுகின்றோம்! ஏனெனில் நபி (ஸல்) அவர்கள்,
‘எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகின்றான்’ என்று கூறியிருக்கிறார்கள். (அறிவிப்பவர் : முஆவியா (ரலி); ஆதாரம் : புகாரி)
மார்க்கக் கல்விக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து நம் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகிறது. நம் குழந்தைகளுக்கு அல்லாஹ் நன்மையை நாடிவிட்டால் அதைவிட நமக்கு வேறென்ன வேண்டும்?
நம்முடைய குழந்தைகளிடம் ‘TOP TEN’ (சுவர்க்கவாசிகள் என நபி (ஸல்) அவர்களால் நன்மாராயம் கூறப்பட்ட) சஹாபாக்களின் பெயர்கள் கேட்கப்பட்டால், பதில் கூறக்கூடியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்! ஆனால் ‘TOP TEN’ சினமாவோ அல்லது பாடலோ கேட்கப்பட்டால் பதில் கூறாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்! இதற்காக பெருமைப் படக்கூடிய பெற்றோர்களும் நம்மிடையே இருக்கின்றனர் என்பதுதான் இதிலே வேதனையான விஷயம்! இதுபோன்ற தவறான செயல்களில் ஆர்வமூட்டுவதன் மூலம், நம்முடைய குழந்தைகளை நாமே படுகுழியில் தள்ளியவர்களாக ஆகிவிடுகிறோம் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தம் குழந்தைகளை நல்ல தரம்வாய்ந்த கல்விக் கூடங்களில் சேர்ந்து பயிற்றுவிக்க அனைவரும் ஆசைப்படுவது இயல்புதான்! அப்படி குழந்தைகளை பயிற்றுவிப்பதற்கு, நம் சமுதாய கல்விக்கூடங்களில் சேர்க்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அப்படி இல்லையெனில், வேறு கல்விக் கூடங்களில் சேர்ப்பதற்கு முன்பே, இந்த பள்ளியில் / கல்லூரியில் படித்தால் நம் குழந்தைகள் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளான தொழுகை, புர்கா போன்றவைகளை பேணி நடக்க பள்ளி நிர்வாகம் அனுமதிக்குமா என்று சிந்தித்து செயல்பட வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் பெற்றோர்களின் பங்கு மிக மிக முக்கியமானது என்பதை உணர வேண்டும். ஏனெனில் குழந்தைகள் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதம் என்பதை மறந்துவிடாதீர்கள். அமானித மோசடி செய்து மறுமையிலே இறைவனின் முன்பு நஷ்டவாளிகளாக ஆகிவிடவேண்டாம்.
நம்முடைய குழந்தைகளுக்கு ஜமாஅத்தோடு தொழுவதற்கு கற்றுத்தரவேண்டும். நாம் பள்ளிவாசலுக்குச் செல்லும் போதெல்லாம் நம்முடைய குழந்தைகளை நம்முடன் அழைத்துச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
அம்மார் பின் ஸூஐப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
‘உங்கள் குழந்தைகளுக்கு ஏழு வயதாகும் போது தொழச்சொல்லி ஏவுங்கள்; பத்து வயதாகும் போது தொழவில்லையெனில் (காயம் ஏற்படாதவாறு) அடியுங்கள்! மேலும் படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : அபூதாவுத் 495).
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கை நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு அழகாக தெளிவுபடுத்துகிறார்கள். சிறுவயது முதலே பழக்கப்படுத்தாத குழந்தைகள் 15 வயது ஆனவுடன் திடீரென்று எவ்வாறு தொழ ஆரம்பிக்கும்? தம்மை மிகப்பெரிய அறிவாளிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் எத்தனையோ பேர்கள் தொழுகையில் கவனக்குறைவாக இருப்பதற்கு, சிறுவயது முதலே அவர்களை தொழுகைக்குப் பழக்கப்படுத்தாதது தான் காரணம் என்றால் அது மிகையாகாது! குழந்தை பெரியவனாக வளர்ந்து இஸ்லாமிய ஒழுக்க மாண்புடன் திகழ்வதற்கு பெற்றோரின் பங்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கின்றது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். மேலும் நம்முடைய குழந்தைகள் பெரியவர்களான பிறகு தீய, மற்றும் மானக்கேடான செயல்களில் ஈடுபடாமல் நல்லொழுக்கமுடையவர்களாக திகழவேண்டும் என்பதே நம் ஒவ்வொருவரின் விருப்பமாகும். இதற்காக நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் குழந்தைகளை சிறுவயது முதலே தொழச் சொல்லி ஏவி அதற்குப் பழக்கப்படுத்த வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக! இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்! அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்” (அல்-குர்ஆன்  29:45)
ஒருவர் ஐவேளை தொழுகைகளை ஜமாஅத்தோடு தொடர்ந்து தொழுவாரானால், நிச்சயமாக அல்லாஹ் அவரை மானக்கேடான மற்றும் தீய செயல்களில் இருந்தும் பாதுகாக்க வாக்குறுதி அளிக்கின்றான்.
நாம் சொர்க்கம் செல்வதற்கு, நம்முடைய நல்ல அமல்கள் மறுமை நாளில் நமக்கு உதவிசெய்யும். நம்முடைய நற்செயல்களைத் தவிர மற்றவர்களுடைய நற்செயல்களின் மூலமாகவும் சொர்க்கம் செல்ல முடியுமா? நிச்சயமாக முடியும்! அதற்கான வழிமுறைகளை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.
‘மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகிறது. (அவை) நிரந்தர தர்மம், பயன்தரும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் சாலிஹான குழந்தை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி); ஆதாரம் : முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களின் எத்தனை அழகான ஒரு அறிவுரை! நாம் நம்முடைய குழந்தைகளை மார்க்க போதனைகளுடன் வளர்த்து இருந்தால், நாம் இறந்தபிறகு, நமக்காக நம் குழந்தைகள் கேட்கக்கூடிய துஆக்கள் மூலம், மறுமை நாள்வரை நமக்கு நன்மைகள் வந்துக்கொண்டே இருக்கும் என்பதில் ஏதாவது மாற்றுக் கருத்து உண்டா?
எனவே, குழந்தைகளை நல்ல முறையில், இஸ்லாமிய வழிமுறைகளில், வளர்க்க வேண்டிய பொறுப்பு கண்டிப்பாக ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கின்றது என்பதை மறந்து விடவேண்டாம். அவ்வாறு வளர்த்து விட்டால், நாம் நம்முடைய பொறுப்பு மற்றும் அமானிதத்தை நிறைவேற்றி விட்டதோடு அல்லாமல், நம்முடைய குழந்தைகள் நமக்கும் மற்றும் நம் சமுதாயத்திற்கும்  ஈருலகில் பயன்களை ஏற்படுத்தித் தரவல்லவர்களாக மாறக் கூடும்!

“கர்ப்பம்” இஸ்லாமின் பார்வை.


 “கர்ப்பம்” இஸ்லாமின் பார்வை.

இறைவன் முதல் மனிதனை மண்ணால் படைத்து அவரிலிருந்தே அவருக்கு ஒரு துணையையும் படைத்தான். அதன் பிறகு அந்த இருவரின் மூலமாக மனிதவர்க் கத்தைப் இந்திரியதைக் கொண்டு படைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.
(கர்ப்பக் கோளறையில்) செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு. (53:46) (உங்களைப் படைக்கின்றான்).
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா (75:37)
அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண் பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான் அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும் அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லைநிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும். (35:11)
இதுபோன்ற பல அல்குர்ஆன் வசனங்கள் மனிதனை இந்திரியத் துளியைக் கொண்டு படைத்ததாக கூறுகின்றன.
இந்திரியத்துளியின் மூலமாக மனிதனை உருவாக்குவதற்காக இறைவன் தேர்வு செய்த இடம் தான்  1)தந்தையின் முதுகந்தண்டு. (இங்கு இந்திரியமாக மனிதக் கருவை சேமித்து வைத்தல்) 2)தாயின் கர்ப்பப்பை (இங்கு பல மாறுபட்ட நிலைகள் ஏற்பட்டு மனிதன் உருவாக்குதல்) கர்ப்பக் கோளறை.
இதைத்தான் இறைவன் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்:
உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின்னர் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை தெளிவாக விவரித்துள்ளோம். (6:98)
மனிதன் தனது தந்தையின் முதுகந்தண்டில் இருந்த இடத்தை குறிப்பதற்கு فمستقرٌ (‘தங்க வைக்கப்படுபவர்’) முஸ்தாகர்ரு’ என்றும்
தாயின் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டதை مستودع (‘மறைத்து வைக்கப்படுபவது’) முஸ்தவ்தா என்றும் (6:98) இந்த வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கம் சொன்னதாக இமாம் இப்னுகதீர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
 அடுத்ததாக பல மாறுபட்ட நிலைகள் ஏற்பட்டு மனிதனாக உருவாக்குதல். பலவிதமான மாறுபட்ட நிலைகள் ஏற்பட்டு மனிதனாக உருவாக்கி அவனது விதியையும் நிர்ணயிக்கும் இடம்தான் கர்பக் கோளறை. இதைதான் இஸ்லாம் அர்ரஹ்ம்  الرحم கர்ப்ப கோளாறை.
மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருவறைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் (உறுதியாக) அறியமாட்டார்கள். எந்த உயிரும் தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாதுஅல்லாஹ் தான் அதை அறிவான். மறுமைநாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் தெரியாது. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி: 7379)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “திண்ணமாக அல்லாஹ் (தாயின்) கருவறையில் வானவர் ஒருவரைப் பொறுப்பாளராக நியமிக்கிறான். அவர் 'இறைவா! (இது ஒரு துளி) விந்து இறைவா! இது பற்றித் தொங்கும் கரு. இறைவா! இது (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு'' என்று கூறிக் கொண்டிருப்பார். அதைப் படைத்(து உயிர் தந்)திட அல்லாஹ் நாடும்போது 'இறைவா! இது ஆணா அல்லது பெண்ணா? நற்பாக்கியம் பெற்றதா? துர்பாக்கியம் உடையதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு? என்று கேட்பார். (அல்லாஹ்வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு) அதன் தாயின் வயிற்றில் அது இருக்கும்போது எழுதப்படும். (புகாரி:  3333)
இறைவன் தான் விரும்புகின்ற விதத்தில் மனிதனைப்படைத்து அந்த மனிதனுடைய விதியையும்  கர்ப்பக் கோளறையிலேயே நிர்ணயித்து விடுகின்றான். இதை ஒருவன் மறுத்தால் அவன் முஸ்லிமாக இருப்பதற்கான தகுதியை இழந்துவிடுகின்றான். இது ஈமானைச் சார்ந்தது.
அடுத்து ஒரு பெண் கருவுற்றால் அவளுக்கு ஏற்ப்படும் மாற்றங்கள் என்ன? அவளுக்கு ஏற்ப்படும் கஷ்டங்கள் என்ன? அவள் பேணவேண்டிய ஒழுங்குகள் என்ன என்பது என்பது பற்றி மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றதைப் பார்ப்போம்.
கர்ப்பம் அறிகுறிகள்

கர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்

1. மாதவிலக்கு நிற்பது

கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும்சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரை கூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்தரிக் காமலேயே மாத விலக்கு நின்றிருக்கும்.

இதற்கு உடல் இயக்கங்களும்நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாகபுதிய இடங்களில் குடியேறுதல்புதிய சூழல்களில் பணி யாற்றுதல்டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல்அதிக கவலைடென்ஷன் போன்ற மன நிலைகளில் இருத்தல்குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் கரு முட்டைகளை  வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும். நோய் என எடுத்துக்கொண்டால்நாட்பட்ட நோய்கள்ரத்த சோகைஊட்டச்சத்துக் குறைபாடுகள்உடல்பருமன்அனோ ரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்ற வற்றால் மாதவிலக்குதள்ளிப்போகலாம். ஆகவேமாத விலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.

2. களைப்பு

பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம்இயல்புக்கு மாறான உடல்சோர்வுமாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12-வது வார வாக்கிலும்சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.

3. மசக்கை

இதை ஆங்கிலத்தில் `மார்னிங் சிக்னெஸ்’ என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை நிச்சயம் வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம். மாதவிலக்கு நிற்பதோடுமேற் கண்ட அறிகுறிகளும் இருந்தால்தாங்கள் கர்ப்பம் தரித்திருப் பதை பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம்.
சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோகாலை உணவுக்குப் பிறகோ குமட்டல்வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப் பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத் திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்தநாள் காலையில் மீண்டும் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.

அதுசரி… இந்த மசக்கை ஏன் வருகிறது தெரியுமா?

கருமுட்டையும்உயிரணுவும் சேர்ந்து கருவானவுடன்முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார் மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும்வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படி இருந்தும் மசக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும்,மண்ணையும்அடுப்புக்கரியையும்சாம்பலையும் தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது. 

இதற்கு காரணம் என்ன?

இந்த காலத்தில் தனக்கு மட்டுமின்றிதனது கருக் குழந்தைக்கு தேவையான சத்தையும் தாய் பெற வேண்டியுள்ளது. இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்பகாலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும்பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.
  
4. அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர்த்தாரைத் தொற்றோஅதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறி குறிகள் கருக்காலத்தின் இரண்டாவதுமூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்திகருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும்அழுத்துவதால் இந்த நிலை உண்டாகிமாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.

5. மார்பகப் பகுதி மாற்றங்கள்

முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்தில் உள்ள ரத்த நாளங்களும்,மொத்த சுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டுகுமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவம் சுரக்கும்.

கர்ப்பக் காலம் தவிரகருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் இந்த மாற்றங்கள் தோன்றும். எனவேமார்பக மாற்றங்களையும் கருத்தரிப் புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.

6. மனநிலை மற்றும் எடையில் மாற்றம்

சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோஎதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்க முடியாத தலைவலிகுறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.


7. வயிறு பெரிதாகுதல்

கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக 18 முதல் 20-வது வாரங்களில் இந்த அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும் வரை நீடிக்கும்.

கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகிஅசைவு தெரியும் நிலைகளும் உண்டு.
இந்த கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறி களாகவும் இருக்கலாம். அதனால்கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.

நரகத்தை நிச்சயிக்கும் திருமணங்கள்


நரகத்தை நிச்சயிக்கும் திருமணங்கள்

திருமணம் என்பது நபி (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இறைவன் தன் திருமறையில் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதைத் தன்னுடைய சான்றாகக் கூறுகிறான்.

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும்இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல் குர்ஆன் 30:21)

இந்த உறவிற்குப் பாலமாக அமைவது திருமணம் தான். ஆனால் பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு மத்தியில் இந்தத் திருமணங்கள் தான் ஓரிறைக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் களங்களாகத் திகழ்கின்றன.

வரதட்சணைக் கொடுமைகள் மற்றும் ஏராளனமான பித்அத்தான காரியங்கள் ஒருபுறம் இருந்தாலும் அதை விடக் கொடியதான இணை வைப்புக் காரியங்கள் தான் நம்முடைய இஸ்லாமியர்களின் திருமணங்களின் ஒவ்வொரு நிகழ்விலும் நிறைந்து காணப்படுகின்றன. இத்தகைய காரியங்கள் நம்மை நிரந்தர நரகத்தில் தள்ளிவிடும் என்பதை அறியாமல் ஆண்களும்,பெண்களும் இவற்றைச் செய்கின்றனர்.

வரதட்சணை வாங்கும் போதும் இணைவைப்பு

திருமணத்திற்கு முன்பாக மாப்பிள்ளைக்குப் பெண்ணை முடிவு செய்வதற்காக நிச்சயதார்த்தம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி அரங்கேறும். அதில் தான் ஆலிம்சாவும்ஊர் ஜமாத்தார்களும்இரு வீட்டு குடும்பத்தார்களும் கூடி அமர்ந்து ஃபாத்திஹா ஓதி வரதட்சணைப் பணத்தை மணமகன் வீட்டாரிடம் ஒப்படைப்பார்கள். அடுத்தவன் காசை அநியாயமாகப் பறிப்பதே நரகத்திற்குக் கொண்டு செல்வதற்குப் போதுமான பாவம் என்றாலும் நிரந்தர நரகத்தை நிச்சயிக்க வேண்டும் என்பதற்காக அந்த வரதட்சணைப் பணத்தை ஒரு மஞ்சள் பையில் வைத்துக் கொடுப்பார்கள். அதில் மஞ்சள்,வெற்றிலைகற்கண்டு போன்றவை கணக்கிட்டு வைக்கப்பட்டிருக்கும். மஞ்சள் பை தான் மங்களகரமானது அவற்றைத் தான் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். மற்ற கலர்கள் நமக்குக் கேடு விளைவிக்கக் கூடியவை என்ற நம்பிக்கையில் தான் இவ்வாறு செய்கின்றனர்.

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 10:107)

நிச்சயமாக இறைவன் தான் இன்பங்களையும் துன்பங்களையும் தரக் கூடியவன் என்ற உண்மையை மறந்து மஞ்சள் நிறம் தான் மங்களம் என்பது நம்மை நரகிற்கு இட்டுச் செல்லும் இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

நல்ல நேரம்கெட்ட நேரம் பார்த்தல்

நிச்சயதார்த்தம் என்ற சடங்கு முடிந்தவுடன் குடும்பப் பெரியவர்கள் கூடி உட்கார்ந்து திருமண நாளை முடிவு செய்வார்கள். கண்டிப்பாக திருமணத்தை சனிக்கிழமைஅல்லது செவ்வாய்கிழமை வைக்கவே மாட்டார்கள். ஏனென்றால் இக்கிழமைகள் இவர்களின் பார்வையில் கெட்ட நாட்களாகும். நிச்சயமாக இந்த நம்பிக்கை இறை மறுப்புக் காரியம் என்பதில் சந்தேகம் இல்லை.

சனிசெவ்வாய் அல்லாத மற்ற கிழமைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வதற்காக பஞ்சாங்கம் போடப்பட்ட சிவகாசி காலண்டரை எடுத்து நல்ல நேரம்கெட்ட நேரம்இராகு காலம்,எமகண்டம் பார்ப்பார்கள். அல்லது  இமாம் சாபிடம் சென்று பால்கிதாப் போட்டுப் பார்த்து ஒரு நல்ல நாளைக் கூறுமாறு ஜோசியம் கேட்பார்கள். இவையெல்லாம் நம்மை நிரந்தர நரகத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய காரியங்கள் என்று நம்முடைய இஸ்லாமியச் சமுதாயத்தவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.

நல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது இறைவனை திட்டுவதாகும். ஏனென்றால் நமக்கு ஏற்படுகின்ற இன்பம்துன்பம் எதுவாக இருந்தாலும் அது இறைவனின் நாட்டப்படி தான் ஏற்படுகிறது. எந்த ஒரு நாளின் காரணமாகவும் அது நிகழ்வதில்லை.

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஆதமுடைய மகன் காலத்தைத் திட்டுவதால் எனக்குத் துன்பம் தருகிறான். நான் தான் காலமாக இருக்கிறேன். என்னுடைய கையில் தான் அதிகாரம் உள்ளது. நான் தான் இரவையும் பகலையும் புரட்டுகிறேன்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ (4826)

மேலும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல்பால் கிதாப் பார்த்தல் இவையனைத்தும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் காரியங்களாகும். மேலும் நமக்கு நாளை என்ன நடக்கும்நாளை நமக்கு நல்ல நேரமாக அமையுமாஅல்லது கெட்டதாக அமையுமாஎன்று அறியக் கூடிய மறைவான ஞானம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக நம்புபவன் இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடியவன் தான்.

அல்லாஹ் கூறுகிறான்:

"வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 27:65)

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்.

(அல்குர்ஆன் 6:59)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்து விட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத் (9171)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

அறிவிப்பாளர்: ஸஃபிய்யா

நூல்: முஸ்லிம் (4137)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்று நோய் என்பதும் கிடையாதுசகுனம் என்பதும் இல்லை. ஆந்தை சகுனமும் கிடையாது. ஸபர்  (பீடை) என்பதும் கிடையாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ (5757)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சகுனம் பார்ப்பது இணை கற்பித்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி)

நூல்: அபூதாவூத் (3411)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவன் சகுனம் பார்த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான்.

அறிவிப்பவர்: இப்னு அம்ரு (ரலி)

நூல்: அஹ்மத் (6748)

மார்க்கம் தடுத்த இத்தகைய பாவச் செயல்கள் தான் இன்றைக்கு இஸ்லாமியர்களின் திருமணங்களில் நிறைந்து காணப்படுகின்றன.

பந்தலிலும் ஓர் பாவ காரியம்

பிறகு திருமணத்திற்காகப் பந்தல் போடும் போது அதிலும் ஓர் அநியாயம் அரங்கேறும். பந்தலில் குலை தள்ளிய வாழை மரத்தைக் கட்டி வைப்பார்கள். குலை தள்ளிய மரத்தைக் கட்டி வைத்தால் இந்த மணமக்களுக்குக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை தான். குழந்தையைத் தரக்கூடிய அதிகாரம் எந்த வாழை மரத்திற்கும் கிடையாது. படைத்த இறைவனுக்கு மட்டும் தான் அந்த அதிகாரம் இருக்கிறது என்பதை இவர்கள் அறியவில்லை.

இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும்பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்ஆற்றல் உடையவன்.

(அல்குர்ஆன் 42:49,50)

இப்ராஹீம் நபிஜகரியா நபி போன்ற நல்லடியார்கள் கூட தாம் நாடிய நேரத்தில் தங்களுக்கு ஒரு சந்ததியை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களின் தள்ளாத வயதில் தான் இறைவன் அவர்களுக்குக் குழந்தை பாக்கியத்தை வழங்குகின்றான் என்ற சரித்திரத்தையும் திருமறைக் குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது. ஆனால் நம் சமுதாயமோ வாடிப் போகும் வாழையில் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள்.

மாலையில் மறைந்துள்ள மர்மம்

மணமகன் திருமணத்திற்காகச் செல்லும் போது தன் கழுத்தில் மலர் மாலைகளைத் தொங்க விட்டுக் கொள்வார். மணத்திற்கு மாலை அணிவதாக நம் ஆலிம்கள் சப்பைக் கட்டு கட்டினாலும் மக்கள் ஒரு மர்மத்திற்காகவே இந்த மாலையை மாட்டுகிறார்கள்.

அதாவது திருமணம் முடிந்தவுடன் அந்த மாலையைக் கழற்றிவீட்டின் ஒரு மூலையில் தொங்க விட்டு விடுவார்கள். அது சில காலங்கள் அப்படியே கிடக்கும். சில காலம் கழிந்தவுடன் அதை அப்படியே எடுத்து யாருடைய பாதமும் அதில் பட்டு விடக் கூடாதாம். பட்டால் திருமணத் தம்பதியினருக்கு ஆகாதாம். அதனால் அதனை குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள். அல்லது கிணறு அல்லது ஆற்றில் போட்டு விடுவார்கள். இப்படிப்பட்ட மர்மங்கள் இந்த மாலையில் மறைந்துள்ளன.

நிச்சயமாக நமக்கு ஏற்படக்கூடிய இன்ப துன்பங்கள் யாவும் இறைவனின் நாட்டப்படி தான் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் மாலையில் கால் பட்டால் மணமக்களுக்கு ஆகாது என்ற மூடநம்பிக்கை நம் சமுதாய மக்களின் மனங்களில் நிறைந்து காணப்படுகிறது. இதோ இறைவன் கூறுவதைப் பாருங்கள்

"அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக

(அல்குர்ஆன் 9:51)

இந்த இறை நம்பிக்கையைக் குழி தோண்டிப் புதைக்கின்ற மர்மம் தான் மாலையில் மறைந்துள்ளது என்பதை மக்கள் என்றைக்கு உணர்வார்களோ தெரியவில்லை.

தாலி கட்டுதல்

தாலி என்ற வார்த்தையே மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பி அடிக்கப்பட்ட ஒன்றாகும். தாலிக்கும் இஸ்லாத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்று தாலி இல்லாவிட்டால் திருமணமே இல்லை என்ற நிலை தான் இஸ்லாமியர்களிடம் நிறைந்து காணப்படுகிறது.

மணமகன்மணமகளின் கழுத்தில் கட்டுவதற்காகத் தாலி என்று ஒன்றைத் தயார் செய்வார்கள். அதில் இத்தனை கருகமணிகள் இருக்க வேண்டும். அதற்குப் பின் ஒரு தங்கத்தால் ஆன ஒரு கோதுமையைக் கோர்ப்பார்கள். அதற்குப் பின் ஒரு பவளத்தைக் கோர்ப்பார்கள். பிறகு கருகமணி என்று இந்த வரிசையில் கோர்த்துதாய்மார்கள் தாலியைத் தயார் செய்வார்கள். இன்றைக்கு ரெடிமேடாக தாலிச் சங்கிலி என்றே தயாரிக்கப்படுகிறது. நிச்சயமாக இந்தத் தாலி என்பதும்தாலி கட்டுதல் என்பதும் பகிரங்கமான இணை வைப்புக் காரியமே!

இந்தத் தாலியின் மூலம் தான் மணமக்கள் இணைந்து வாழ்கிறார்கள். அதில் உள்ள கருகமணிகளும் கோதுமையும் பவளமும் தான் இவர்களுக்கு நல்ல வாழ்வைத் தரும் என்ற நம்பிக்கையிலேயே இவற்றை மணப் பெண்ணின் கழுத்தில் தொங்க விடுகிறார்கள்.

நமக்கு நன்மை தரும் என நம்பி எதைத் தொங்க விட்டாலும் அது இணை வைப்புக் காரியம் தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தாயத்தைத் தொங்க விடுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.

அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர்(ரலி)

நூல்: அஹ்மத் (16781)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தாயத்தைத் தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான். யார் சிப்பியைத் தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்ற மாட்டான்.

அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர்(ரலி)

நூல்: அஹ்மத் (16763)

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவருடைய கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் இருந்தது. இது என்னஎன்று கேட்டார்கள். அதற்கு அவர், "வாஹினா (தொடையில் ஏற்படும் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்)'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் "இதைக் கழற்றி விடு! இது உனக்கு பலஹீனத்தைத் தான் ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் நீ ஒரு போதும் வெற்றி பெற மாட்டாய்'' என்று கூறினார்கள்.

நூல்: அஹ்மத் (19149)

எனவே தாலி என்ற பெயரில் நாம் கட்டுகின்றவைகள் எவ்வளவு பெரிய மாபாதகச் செயல் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆரத்தி எடுத்தல்

பிறகு மணமகனையும்மணமகளையும் நிறுத்தி வைத்து அவர்கள் மீது பட்ட கண் திருஷ்டியெல்லாம் நீங்க வேண்டும் என்பதற்காக ஆரத்தி எடுப்பார்கள்.

ஒரு தட்டிலே கற்பூரத்தைக் கொளுத்தி வைத்து அதை மணமகன்மணப்பெண் ஆகியோரின் மீது முகத்திற்கு நேராக மூன்று தடவை சுற்றி விட்டால் அவர்கள் மீது பட்ட கண் திருஷ்டியையெல்லாம் அந்த நெருப்பும் கற்பூரமும் நீக்கி விடும் என்ற நம்பிக்கையில் இந்த ஆரத்தி எடுக்கப்படுகிறது.

நிச்சயமாக இது ஒரு நெருப்பை வணங்கும் செயலே தவிர வேறில்லை. நிச்சயமாக எந்த ஒன்றும் நமக்கு இறைவனிடமிருந்து ஏற்படக் கூடிய எதையும் தடுத்து விட முடியாது.  ஒரு இறை நம்பிக்கையாளனின் கொள்கையாக இருக்க வேண்டும். அனைத்து சிரமங்களையும் நீக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான் என்றே நம்பிக்கை கொள்ள வேண்டும்.

"தரை மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?'' என்று கேட்பீராக! "இதிலிருந்தும்மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்'' என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன் 6:63,64)

தாய்தந்தையருக்கு ஸஜ்தாச் செய்தல்

சில ஊர்களில் திருமணச் சடங்குகள் முடிந்ததும் மணமகனும்மணப் பெண்ணும் தாய் தந்தையரின் கால்களில் விழுந்து ஸஜ்தாச் செய்வார்கள். நிச்சயமாக இது இணை வைப்பின் உச்ச கட்டம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அல்லாஹ் கூறுகிறான்:

இரவுபகல்சூரியன்சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ,சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!  

(அல்குர்ஆன் 41:37)

இவ்வாறு நம்முடைய இஸ்லாமியர்களின் திருமணங்களில் நிறைந்து காணப்படக் கூடிய இன்னும் பல இணை வைப்புக் காரியங்களை நாம் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். நபியவர்கள் எந்தத் திருமணத்தை தன்னுடைய வழிமுறையாக வலியுறுத்தினார்களோ அந்தத் திருமணங்கள் இன்றைக்கு ஷைத்தானின் வழிமுறைகளாகக் காட்சியளிக்கின்றன. எனவே நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும் இது போன்ற இணை வைப்புக் காரியங்களை தவிர்த்துஇம்மையிலும்,மறுமையிலும் வெற்றி பெற்ற மக்களாக இறைவன் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!

மூட நம்பிக்கைகள்

1.      ஆயிசு நூறு

2.     காக்கை கத்தினால் தபால் வரும்

3.    மழையும் வெயிலும் அடித்தால் நரிக்குக் கொண்டாட்டம்

4.   கல்லாப் பட்டறை மேற்குத் திசையில் தான் இருக்க வேண்டும்

5.     சமையல் அடுப்பு கிழக்குத் திசையில் தான் இருக்க வேண்டும்

6.    வீட்டு வாசல் மையப் பகுதியில் இருப்பது கூடாது.

7.     குழந்தை தொட்டிலில் மஞ்சளைக் கட்டித் தொங்க விடுவது

8     வீடுகளில் தாவீஸ் தகடுகளைத் தொங்க விடுவது

9     பூனை குறுக்கே சென்றால் அபசகுணம்

10    விதவைப் பெண் குறுக்கே சென்றால் அபசகுணம்

11     திருமணத்தில் வாழைக் குலைகளை மரத்துடன் கட்டி வைப்பது

12    ஆரத்தி எடுப்பது

13     திருமணத்தில் தாய் தந்தையர்கள் காலில் ஸஜ்தாச் செய்வது

14     தாயத்துதாவீஸ் அணிவது

15     தகடுகளில் எழுதிக் கரைத்துக் குடிப்பது

16  வீடுகள் கட்டும் போது கண் திருஷ்டிக்காக மனிதவுருவில் திருஷ்டி பொம்மைகளை            மாட்டுவது

17     பூசணிக்காயைத் தொங்க விடுவது

18     பானைகளில் புள்ளி வைத்து வீட்டு மாடிகளில் வைப்பது

19     வீட்டில் முற்றத்தில் அல்லது வீட்டுக்குள் வெள்ளை நிற கற்களைத் தொங்க விடுவது

20     மிளகாய்வெற்றிலைமஞ்சள் இன்னும் சில பொருட்களை வைத்துக் கழித்து வைத்தல் என்ற பெயரில் தலையைச் சுற்றி எச்சிலைத் துப்பி வீதியில் எறிவது

21     கணவனைக் கைக்குள் வைத்துக் கொள்வதற்காக மை போடுதல்

22     தாய்தந்தையர் மீது சத்தியம் செய்தல்குர்ஆன் மீது சத்தியம் செய்தல்

23     உள்ளங்காலில் ஊறல் எடுத்தால் தபால் வரும் என்ற நம்பிக்கை

24     தாலி கட்டுதல்கோதுமைபவளம்கருகமணி போன்றவற்றைக் கோர்த்து தாலி கட்டுதல்

25     திருமணத்தில் மாலை மாட்டுதல்

26     மணமகள்மணமகன் வீட்டிற்குள் நுழையும் போது படியரிசி போடுதல்

27     மங்களகரமாக இருப்பதற்கு மஞ்சள் பையில் வைத்து அதில் மஞ்சள்வெற்றிலைபாக்கு போன்றவற்றை வைத்து அனுப்புதல்
இன்னும் வரப் போகும் அந்நாளிலிருந்துஉங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.  அன்று  ஓர் ஆத்மா  மற்றொரு ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது.  அதனிடமிருந்து அதன் பாவங்களுக்காக பரிகாரமாக எந்த  நஷ்ட  ஈடும் பெறப்படாது.