ஞாயிறு, 29 ஏப்ரல், 2012
வலிபோக்கும் ஆன்மீக வழிகள்
வலிபோக்கும் ஆன்மீக வழிகள்
عن عثمان بن ابى العاص الفقى انه شكا الى رسول الله صلى الله عليه و سلم وجعا يجده فى جسده منذ اسلم فقال رسول الله صلى الله عليه و سلم ضع يدك على الدي يألم من جسدك و قل باسم الله ثلاثا و قل سبع مرات اعوذ بالله و قدرته من شر ما اجد و أحادر
உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நபித்தோழர் உஸ்மான் பின் அபில் ஆஷ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து, "நான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து என் உடலின் ஒரு பகுதியில் வலியை உணர்கிறேன்" என்று முறையிட்டார்கள்.
அதற்கு நபிகள் பெருமான் கூறினார்கள் “ உன் உடலின் வலிக்கிற பகுதியில் உன் கையை வைத்து Bபிஸ்மில்லாஹ் என்று மூன்று முறை கூறவும். பின்னர் ஏழு தடவை அவூது Bபில்லாஹி வ Qகுத்ரதிஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிர் என்று கூறவும். (நூல்: முஸ்லிம்)
இதே ஹதீஸ் இன்னும் இரு இடங்களில் சிறி்ய வார்த்தை மாற்றங்களோடு வருகிறது. அதில் அவூது Bபி இZஜ்Zஜதில்லாஹி வ Qகுத்ரதிஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிர் என்று “ இZஜ்Zஜதில்லா “ என்ற வார்த்தை சேர்த்து வருகிறது.
இன்னும் அந்த நபித்தோழர் கூறுவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது “ நான் நபியவர்கள் கூறியது போன்று செய்தேன் அல்லாஹ் என் வலியைப்போக்கினான் இன்னும் எனக்கு பரிபூரண சுகத்தையும் தந்தான். அதன் பின் என் குடும்பத்தார்களும், மற்றவர்களும் வலி என்று முறையிடும் போதேல்லாம் நான் அவர்களுக்கு இந்த துஆவைக் கற்றுக்கொடுக்க தவறுவதில்லை”.
இன்னொரு இடத்தில் “ வலியினால் நான் உயிர் மாண்டு போகும் நிலையில் இருந்தேன்” என்றும் வருகிறது.
இந்த ஹதீஸ் சமூகத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
இந்த துஆவின் பொருள் “ அல்லாஹ்வின் முழுமையான கண்ணியத்தைக்கொண்டும், இன்னும் அவன் சக்தியைக்கொண்டும் நான் உணரும் இந்த வலியை விட்டும், இன்னும் இதன் மூலம் எதுவும் வியாதிவந்து விடுமோ என்ற எண்ணதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன்”.
நபி மருத்துவம் என்பது இன்றும் உலகில் கோலேச்சிக்கொண்டிருக்கிற ஒரு செய்தியாக இருக்கிறது.
நபி பெருமான் எவ்வாறு உலகில் உள்ள எல்லா துறைகளுக்கு அது சமயம், அரசியல், பொருளாதாரம், வாழ்வியல், இலக்கணம், இலக்கியம் என்ற நிலைகளில் சிறந்த முன்னோடியாக இருந்தார்களோ அது போன்றே மருத்துவத்திலும் நபிகென்று ஒரு தனி இடம் உண்டு.
நபித்தோழர்கள் தங்களின் குடும்ப செய்திகள், பொருளாதாரம், மார்க்கம் போன்றவற்றில் சந்தேகம் ஏற்படும் போது எப்படி நபி பெருமான் அவர்கள் பக்கம் திரும்பினார்களோ அது போன்று உடல் ரீதியான் நோய்களும், அசவுரியங்களும் ஏற்படும் போதும் நபியிடம் வந்து அதற்கான தீர்வை வேண்டி நின்றார்கள் அதன் மூலம் இந்த சமூகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் தான் நபி மருத்துவம்.
மற்ற மருத்துவத்திற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம், மற்றவை மனிதனின் அறிவுகளைக்கொண்டும், அனுமானங்களைக் கொண்டும் உருவாக்கப்பட்டவை, ஆனால் இது இறைவனின் புறத்திலிருந்து நபியின் மூலமாக மனித குலத்திற்கு அருளப்பட்ட மிகச்சரியான செய்தியாகும்.
நாம் மேலே பார்த்த ஹதீஸ் நம்முடைய முன்னோர்களான ஸலபுகளாலும், ஆன்மீக வழிகாட்டிகளான இறைநேசச்செல்வர்களாலும், முஜர்ரப் என்று சொல்லப்படக்கூடிய (அதை செய்து அனுபவப்பூர்வமாக அதனுடைய பயன் அடைந்துகொண்ட செய்திகளில் இதுவும் ஒன்றாகும்).
பொதுவாக வலிகள் உடலின் மொழிகள்.
வந்திருக்கும் ஒரு நோயயோ அல்லது வரவிருக்கும் ஒரு நோய் குறித்தோ உடல் தரும் சமிக்கைகளின் வெளிப்பாடுதான் வலிகள் .
பொதுவாக இன்று நம்மிடம் வலிகள் என்று சொன்னாலே மருந்தகங்களுக்கு செல்லாமலே புருபன் போன்ற வலி நிவாரணிகளை பயன்படுத்தும் பழக்கம் உண்டு. அது சாதாரண வலிகளாக இருந்தால் பரவாயில்லை ஆனால் அதுவே இதயவலி என்று சொன்னால் நாம் அப்படி பயன்படுத்துவது இல்லை.
பொதுவாக எந்த மருத்துவமாக இருந்தாலும் நம்பிக்கை என்பது வேண்டும். கிட்டத்தட்ட 75 விழுக்காடு நோய் நிவாரணம் கிடைப்பதெல்லாம் நாம் மருத்துவரிடம் சென்று விட்டோம் என்பது கொண்டோ அல்லது நாம் மருந்து உட்கொள்கிறோம் என்ற எண்ணம் கொண்டோ குணமாகிறது மீதம் உள்ள 25 சதவிகித்தில் 15% மருத்துவரின் வார்த்தை கொண்டும் மீதம் உள்ள வெறும் 10% மாத்திரைகளினால் சுகம் கிடைக்கிறது என்பது நான் சமீபத்தில் வாசித்த ஒரு புத்தகத்தகவல்.
என்ன ஒரு அற்புதமான வைர வரிகளில் நபியவர்கள் இந்த சமுதாயத்தை பக்குவப்படுத்தி இருக்கிறார்கள்.
நீங்கள் மருத்துவம் செய்வதானாலும் இறைவனிடத்திலே அதற்கு முழுமையான நிவாரணத்தை கேளுங்கள்.
இறைவனை அன்றி உங்கள் நோய்குரிய சரியான நிவாரணத்தை யாரால் கொடுக்க முடியும்.
அவன் தான் உங்கள் உடலுக்கும், உங்கள் நப்ஸுக்கும் எஜமானன். அவனால் மட்டுமே அதன் இரகசியங்களை புரிந்துகொள்ள முடியும்.
நாம் எப்பொழுது முழு நம்பிக்கையோடு அவனிடன் முழு ஒப்படைப்பை செய்து விடுகிறோமோ அப்பொழுது அவனே அதற்கு பொறுப்பாளியாக ஆகிவிடுகிறான்.
பொய்யே உரைக்காத சாதிகுல் அமீன் சத்தியத்தூதர் அவர்கள் கூறினார்கள் “ அல்லாஹ் எந்த ஒரு நோயையும் இறக்கவில்லை அதனின் நிவாரணத்தையும் இறக்கியே தவிர, அதை அறிந்தவர்கள் அறிந்திருக்கிறார்கள் அதை பற்றி அறியாதவர்கள் அறியாமலே இருந்து விடுகிறார்கள்“. நல்ல வார்த்தைகளும், நம்பிக்கைகளும் தான் நிவாரணத்தை கொண்டுவருபவை
இந்த ஹதீஸில் கூட நபியவர்கள் சொல்லித்தந்த மிக அழமான வார்த்தைகள் “ இறைவனின் கண்ணியத்தைக்கொண்டு பாதுகாப்பு தேடுங்கள் ஏனெனில் உலகில் எல்லாம் அதற்கு முன் மண்டியிடுகின்றன, அது போன்று அவனது சக்தியைக் கொண்டும் பாதுகாப்பு தேடுங்கள் அவன் சக்தியல்லாத ஒரு சக்தி உலகில் இல்லை.
வெறும் வலி என்று மட்டும் நபியவர்கள் நிறுத்தவில்லை மாறாக அதன் மூலம் தோன்ற இருக்கிற அனைத்துவிதமான கெடுதிகளைவிட்டு ம் பாதுகாப்பு தேடினார்கள்.
வயிறு வலிக்கிறதா அல்சராக இருக்கலாம்
அடிவயிறு வலிக்கிறதா சிறுநீரக கல்லாக இருக்கலாம்
இடது கை வலிக்கிறதா இருதய நோயாக இருக்கலாம்
என்றெல்லாம் நாமாக முடிவு செய்து பயம் கொள்கிறோமே, அவை அத்தணைக்கும் இதில் நிவாரணம் உண்டு.
இங்கு தேவை முழுமையான 100% நம்பிக்கை மட்டுமே. என் நபி சொன்னார்கள் நான் செய்கிறேன். இறைவனிடமே நிவாரணத்தை கேட்கிறேன் என்று ஆகிவிடவேண்டும்.
அட போங்க “ இதெல்லாம் நமக்கு ஒத்துவராதுப்பா “ என்று மருந்துகளை உண்கொண்டாலும், அங்கு யார் நிவாரணத்தை தர இருக்கிறார்கள், நாம் சாப்பிடும் மருந்துகளா? மருந்துகள் என்று நம்பினால் நாம் ஈமானிய நம்பிக்கைவிட்டு வெகு தூரம் சென்று விட்டோம் என்று அர்த்தம்.
நான் மருந்து சாப்பிட்டாலும் அந்த மருந்தைக்கொண்டு ஷிபாவைத் தருவது என் ரப்பு என்ற நம்பிக்கை வரவேண்டும்.
சமீபமாக ஒருவரை நலம் விசாரிக்க சென்றிருந்தேன் அவர் ஒரு புற்று நோயாளி, அந்த வலியினால் அவர் படும் அவஸ்தையைக் கண்டு உண்மையில் மிகவும் ஆடிப்போனேன். அல்லாஹ் அக்பர்.
உலகில் உள்ள அனைத்து புற்றுநோயாளிகளுக்கும் இறைவன் பரிபூரண சுகத்தை தருவானாக, அவர்கள் வலியினால்படும் வேதனையிருந்து இந்த துஆவின் பரக்கத்தால் அவர்களைக் காப்பானாக.
இந்த துஆவினால் பிரயோஜம் அடைய நினைப்பவர்களிடம் ஒரு வேண்டுகோள், இது உங்களின் நம்பிக்கையை பொருத்தே அமையும். சிலருக்கு ஒரு தடவை ஓதினால் போதும், சிலருக்கு ஆயிரமும், லட்சமும் கூட ஆகலாம்.நிவாரணம் கிடைக்கும் வரை செய்தால் பலன் நிச்சயம்.
இறைவன் திருமறையில் கூறுகிறான் “ உங்கள் துஆக்கள் மட்டும் இல்லை என்றால் அல்லாஹ் உங்களை ஒரு பொருட்டாகவே கருதியிருக்க மாட்டான்”
நபி வழியை நம்வழியாக்குவோம் வலியை இல்லாமல் ஆக்குவோம்.
இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்
இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்
Inbox
x
Inbox
![]()
மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்
தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப்புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்றுகண்டறியப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத்தெரிவித்துள்ளது.
ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில்,மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ்எண்ணெயை உபயோகிக்கலாம்.
இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய்
![]()
மார்பக புற்றுநோயை ஆலிவ் எண்ணெய் தடுக்கும்.
பெண்கள் தினசரி உணவில் 10 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பக புற்றுநோயைதடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிற்து.
புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களை தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமாபல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். மனித உடலுக்கு பொருத்தமான உயிரினமான எலியிடம்ஆராய்ச்சி நடத்தப்படது.
தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர். அதில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயைஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித்தொழிப்பது தெரிய வந்தது. மேலும், மரபணுவுக்கு சேதம்ஏற்படாமலும் அது பாதுகாப்பது கண்டுபிடிக்கப்பட்டது.. இதன்மூலம், மரபணு பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்றபுற்றுநோய்களையும் ஆலி எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி ஆராய்ச்சியாளர் எஜுர்ட் எஸ்ரிச் கூறுகையில், " பெண்கள் தினசரி உணவில் 50 மிலி அல்லது 10 ஸ்பூன்ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம் " என்றார். உலக அளவில் பெண்களின் உயிர்பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய். அதை கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார்அவர்.
ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதயநோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார்.
![]()
இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலகஅளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான்கருதப்படுகிறது.
இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாகஇருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன
உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டுவந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
|

சனி, 28 ஏப்ரல், 2012
வாகன விபரங்களை தெரிவிக்கும் எஸ்எம்எஸ் சேவை: மத்திய அரசு துவக்கம்
வாகன விபரங்களை தெரிவிக்கும் எஸ்எம்எஸ் சேவை: மத்திய அரசு துவக்கம்
வாகன பதிவு விபரங்களை எஸ்எம்எஸ் மூலம் மொபைல்போனிலேயே தெரிந்து கொள்ளும் புதிய சேவையை மத்திய அரசு துவங்கியுள்ளது. இதன்மூலம், திருட்டு மற்றும் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும் வாகனங்களை எளிதாக கண்டுபிடுக்க முடியும்.
வாகன பெருக்கத்திற்கு தக்கவாறு திருட்டு வாகனங்களின் புழக்கமும் மார்க்கெட்டில் சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் யூஸ்டு கார் அல்லது இருசக்கர வாகனங்கள் வாங்குவோர் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
இந்த நிலையில், வாகன விபரங்களை உடனடியாக தெரிந்துகொள்ள ஏதுவாக புதிய எஸ்எம்எஸ் சேவையை மத்திய அரசு துவங்கியுள்ளது.09212357123 என்
அடுத்த ஒரு சில வினாடிகளில் பதில் எஸ்எம்எஸ் மூலம் வாகனத்தின் விபரம் நம் மொபைல்போனுக்கு வந்து விழுகிறது. அதில், உரிமையாளர் பெயர், வாகனம் எந்த ரகத்தை சேர்ந்தது, வரி காலாவதி ஆகும் விபரங்கள் உள்ளன.
இதன்மூலம், சேவையின் மூலம் திருட்டு வாகனத்தை வெகு எளிதாக கண்டுபிடித்துவிடலாம். கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களின் விபரங்களையும் எஸ்எம்எஸ் மூலம் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வாகனங்களாக இருந்தால், அந்த வாகனம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு ஒரு முறையாவது சென்றிருந்தால் அந்த வாகனங்களின் விபரத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவையின் மூலம் போலி டாக்குமென்ட் மூலம் விற்பனைக்கு வரும் வாகனங்களையும், சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும் வாகனங்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
முன்னோக்கி மின்னஞ்சல்



"மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!!
"மீன் சாப்பிடுங் க! இதயநோய் எட்டிப் பார்க்காது !!
Inbox
x
Inbox
"மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!!
முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
15 முதல் 49 வயதுவரை உடைய 49000 பெண்களிடம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இதயநோய் பாதிக்கப்பட்டவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு வாரம் 3 நாட்களுக்கு மீன் உணவு கொடுக்கப்பட்டது. அவர்களின் உடல்நிலை குறித்து பின்னர் கேள்வி கேட்கப்பட்டது. அதில் மீன் உணவு உட்கொண்டவர்களுக்கு இதயநோய் பாதிப்பு குறைந்தது தெரியவந்தது.
ஒமேகா கொழுப்பு அமிலம்
மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு ரத்தநாளங்களில் படிவதை தடுக்கிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. இதனாலேயே இதயநோய் பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
வயதான பெண்களுக்கு
மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வறுத்த மீனை சாப்பிடுவதை காட்டிலும், இதர முறையில் சமைத்து சாப்பிடும் மீன் உணவே நல்ல பலனை தருகிறது.
அமெரிக்காவில் உள்ள சிகாகோவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டொனால்டுலாயிட் ஜோன்ஸ் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.சராசரியாக 63 வயது உள்ள பெண்கள் 84 ஆயிரம் பேரிடம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ஓவன் முறையில் சூடுபடுத்தப்பட்ட மீன் உணவு வகைகளை சாப்பிட்ட பெண்களுக்கு இதயநோய் பாதிப்பு 30 சதவீதம் குறைந்து இருப்பது தெரியவந்தது. இத்தகைய உணவு முறையை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில் பொரிக்காத மீன்களை சாப்பிட்டு வந்தவர்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது. ஓவனில் பதப்படுத்தப்பட்டு சூடு செய்யப்பட்ட மீன் உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கறுப்பு மீன்கள், சாலமோன் மீன்கள், இதர துனா மற்றும் வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் சிறந்த பலன் அளிப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
மீன்களை வறுத்து சாப்பிடுவதால் மீன் சத்துகள் கிடைக்காமல் போவதுடன் அத்தகைய உணவு தயாரிப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வறுத்த மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு 48 சதவீதம் கூடுதல் ஆகிறது எனவும் அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)